தேயிலை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

Admin 2 months ago

மஞ்சூரில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்து மாலை முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக உறை பனிப்பொழிவு நிகழும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் நிலவும்.

இதன் காரணமாக தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மஞ்சூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இனிவரும் நாட்களில் உறை பனிப்பொழிவு நிகழும். அதன் அறிகுறிகள் தற்போது தெரிய ஆரம்பித்து விட்டன. கடுங்குளிர் நிலவி வருவதால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உறை பனிப்பொழிவு தொடங்கினால், தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகிவிடும். இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் ந‌‌ஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனாலேயே முன்கூட்டியே அங்குள்ள தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்