வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Admin 2 months ago

தர்மபுரி மாவட்டத்தில், வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பல ஓட்டல்களில் வெங்காயம் இன்றி, மற்ற காய்கறிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த பருவமழையால், பல்வேறு பகுதியில் உள்ள ஏரி, குளம், அணை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

எப்போதும் இல்லாத வகையில், தண்ணீரை கண்ட விவசாயிகள், அதிக பரப்பளவில் நெல்நடவு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நெல் பயிரை மட்டுமே சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, வெங்காயத்தின் விலை உயர்வால் அதனை சாகுபடி செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால், விவசாயிகளின் கவனம் வெங்காயத்தின் மீது திரும்பியது. இதனால், குறுகிய கால பயிரான சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தை சாகுபடி செய்யும் பணியில், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்