மேச்சேரியில் தக்காளி சீசன் துவங்கியது

Admin 2 months ago

மேச்சேரியில் தக்காளி சீசன் துவங்கிய நிலையில், மழையால் கொள்முதல் விலை, சற்று உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுப்பகுதியில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு ஆண்டுக்கு, 30,000 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. ஆவணியில் சாகுபடி தொடங்கிய நிலையில், சந்தைக்கு பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது. தற்போது தினமும், 100 முதல், 200 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம், மேச்சேரி சுற்றுப்பகுதியில் வியாபாரிகள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் முகாமிட்டு, தக்காளி பழங்களை கொள்முதல் செய்து விற்பனைக்கு,

பெட்டிகளில் அடுக்கினர். கடலோர மாவட்டங்களில் நீடிக்கும் மழையால், தக்காளி விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் குறைந்தபட்சம், ரூ.22 முதல் அதிகபட்சம் ரூ.23க்கு கொள்முதல் செய்தனர். பிற மாவட்டங்களில், தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி கொள்முதல் விலை, சற்று அதிகரித்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்