முருங்கைக்காய் விலை கிலோ ரூ.800

Admin 2 months ago

திண்டுக்கல்லில் வரத்து இல்லாததால், ஒரு கிலோ முருங்கைக்காய் கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநியில் 2,000 ஹெக்டேரில் முருங்கை சாகுபடியாகிறது. இங்கிருந்து மதுரை, சேலம், கோவை, கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் விற்பனைக்கு செல்கிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு சீசன் காலத்தில் தினமும் 12 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். கடந்த 2 மாதங்களாக வரத்து குறைந்தது. உள்ளூர் வரத்து இல்லாததால் வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்தனர். அதனால், கடந்த வாரம் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது.

தற்போது வெளியூர் வரத்தும் குறைந்து போனது. இதனால், புதன்கிழமை காலை ஒரு கிலோ ரூ.600க்கும், மாலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.800க்கும் விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முருங்கை வரத்து இல்லாததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 முருங்கைக்காய் இருக்கும். முகூர்த்த நாட்கள் என்பதால், கிலோ ரூ.1000 கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். வெங்காயத்தை விட விலை வேகமாக அதிகரித்து வருகிறது என்றனர்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்