கறவை மாடுகளை பாதிக்கும் மடிவீக்க நோய்!!

Admin 2 months ago

கறவைகளை பாதிக்கும் மிக முக்கிய நோய் இந்த மடிவீக்க நோய் தான். மடிவீக்க நோய் என்பது பால் உற்பத்தி செய்யும் பால் சுரப்பிகள் அழற்சிக்கு உள்ளாவதால் உண்டாகிறது. இந்த நோய் நுண்ணுயிரி, நச்சுயிரி, பு+ஞ்சை, ஒவ்வாமை மற்றும் வேதிப்பொருட்களால் பரவுகிறது. மடியின் ஒரு பகுதி அல்லது அனைத்து பகுதிகளும்

இதனால் தாக்கப்படுகின்றன இந்த நோயை பண்ணையை விட்டு முழுமையாக வெளியேற்றுவது கடினமாகும். ஆனால், நல்ல பராமரிப்பு முறைகளால் இதனை தடுக்க முடியும். அதைப் பற்றி பார்போம்.

மடிவீக்க நோயின் நிலைகள்

 இந்த நோயின் முதல் வகையில், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் நுண்ணுயிரிகள் மடியினுள் இருந்து நோய் அறிகுறியற்ற மடிவீக்க நோயை உண்டு பண்ணுகிறது.

 இரண்டாம் வகையில், சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படும் பசுக்கள் கன்று ஈன்றவுடன் தீவிர மடிவீக்க நோய்க்கு உள்ளாகும். இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டைபைலோ காக்கஸ் ஈகோலை போன்ற நுண்ணுயிரிகளால் உண்டாகிறது.

 மூன்றாம் வகையானது, கறவை வற்றிய பசுக்களில் காணப்படுகிறது. இது வற்றுக்காலத்தின் தொடக்கத்தில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்ற நுண்ணுயிரிகள் ஊடுருவதால் உண்டாகிறது.

நோய் பரவும் முறைகள்

 சில நுண்ணுயிரிகள் பாலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாதாரணமாக இருக்கும். பால் கறக்கும் போது கறவையாளரின் கையில் இருந்து கறவை இயந்திரத்தில் இருந்து நுண்ணுயிரிகள் பரவும்.

 பால் கறந்தவுடன் தரையில் படுக்கும் போது காம்பின் துவாரம் வழியாக தரையில் இருக்கும் நுண்ணுயிரிகள் பரவும். மருத்துவரின் ஆலோசனை இன்றி மடியில் மருந்து செலுத்தும் போதும் பரவலாம்.

 ஒரு கறவை காலத்தின் மொத்த பால் உற்பத்தியில் 15 சதவீத இழப்பு உண்டாகிறது. பாலின் திடப்பொருள் இழப்பு ஒரு சதவீதம் ஏற்படுவதால் அதன் தரம் குறைந்து பால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பண்ணையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கிறது.

தவிர்க்கும் வழிமுறை

 பால் கறக்கும் இடம் மற்றும் சுற்றுச்சு+ழல் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும். மாட்டுக்கொட்டகையின் உள்ளே ஈக்கள் மற்றும் பு+ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாட்டுக்கொட்டகையின் தரையை நல்ல வடிகால் வசதியுடன் அமைத்தல் வேண்டும். மேலும், தரையை சிமெண்ட் மற்றும் கான்கிரீட் மூலம் அமைக்க வேண்டும்.

 பால் கறப்பதற்கு முன்பு சாணம், குப்பை போன்றவற்றை அகற்றிவிட்டு தரையை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசினியை கொட்டகையினுள் தௌpத்தல் வேண்டும். பால் கறக்க உபயோகிக்கும் கறவை இயந்திரங்களை சுத்தமான நீரால் கழுவிய பின் சுடுநீரால் கழுவ வேண்டும்.

 ஒரு மாட்டில் பால் கறந்து முடித்து அடுத்த மாட்டிற்கு அதே கறவை இயந்திரங்களை உபயோகிக்கும் முன் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தரம் சோதிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். கையால் பால் கறக்கும் போது கறப்பவர்களின் கையில் இருந்து கிருமிகள் காம்பின் துவாரம் வழியாக மடியினுள் சென்று நோயை ஏற்படுத்திவிடும்.

 எனவே கையை சுத்தமாக கழுவியும், நகங்களை வெட்டியும் இருத்தல் வேண்டும். கையில் நகங்கள் இருந்தால் இவை மடிக்காம்பில் பட்டு மடிநோய் ஏற்பட ஏதுவாகும். பசுவின் மடியை பால் கறப்பதற்கு முன் சுத்தமான நீரினால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பால் கறந்தவுடன் பசுவை உடனே மண் தரையில் படுக்க விடக்கூடாது.

 காம்பின் மீது புண், வெடிப்பு, காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மடிநோய் பாதிப்பு தெரியவந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை செய்ய வேண்டும்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்