தொட்டி, டீசல் மோட்டார் மற்றும் குழாய் அமைப்பதற்கு மானியம்!!

Admin 2 months ago

திருப்புர் மாவட்டம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் திருப்பு+ர் மாவட்டம், குடிமங்கலம் வட்டாரத்தில் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து மானியம் பெற்றுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும், டீசல் மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரமும், குழாய் அமைக்க ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

 இதில் கிணற்றிலிருந்து சொட்டு நீர்ப்பாசன வடிகால் வரைக்கும் அமைக்கப்படும் குழாய்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

 இந்த குழாய்களின் நீளத்தைப் பொறுத்து மானியத்தொகை மாறுபடும். இந்தத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.

 எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் குடிமங்கலம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். 


 

Share This

வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்