கால்நடைகளுக்கு சத்தான தீவனம் கால்நடை பராமரிப்புதுறை ஆலோசனை
Admin    2 months ago    130
Item number 1

அதன்படி, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, அரிசிக் குருணை, உளுந்து, பயறு, கடலைப் பொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில், 50 சதவீதம் வரை சேர்க்கலாம். உள்ளூரில் விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருள்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு குறைவதுடன், சத்தான உணவும் கிடைக்கிறது. கரும்புச் சோகை, சக்கைகளும் மாடுகளுக்கு நல்ல உணவாகும். தினமும், 20 — 25 கிலோ வரை அளிக்கலாம்.

மர இலைகள் சத்துள்ள தீவனமாக அமைந்துள்ளது. அகத்தி, சவுண்டால், கிளிரிசிடியா, கொடுக்காப்புள்ளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மர இலைகளை கோடைக் காலத்தில் அளித்து தீவனப்பற்றாக்குறையை போக்கலாம். மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டு, கம்பு தட்டு, கேழ்வரகு தட்டு போன்றவற்றையும் கோதுமைத்தட்டுடன் சேர்த்து அளிக்க வேண்டும். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10- – 15 கிலோ வரை அளிக்கலாம். மர இலைகளை உலர வைத்து அதன் ஈரப்பதம் 15 – -20 சதத்துக்கு கீழே உள்ள நிலைகளில் அளிப்பது சிறந்தது. மர இலைகள் மீது சிறிது உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளித்தால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.

மாலை, இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும். தீவனத் தட்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் வீணாவது குறையும். முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல், இரண்டு அல்லது மூன்று தடவை பிரித்து சிறிது சிறிதாக அளித்தல் நல்லது. இவ்வாறு, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.